

தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து, எழுதி, பாடி, நடனமாடி இருக்கும் பாடல், ‘ஓ பெண்ணே’. பான்-இந்திய பாப் பாடலாக உருவாக்கப்பட்டுள்ள இதை, டி.சீரிஸ் சார்பில் பூஷன் குமார் தயாரித்துள்ளார். இதன் தமிழ்ப் பதிப்பை கமல்ஹாசன் வெளியிட்டார்.
அப்போது அவர் பேசும்போது, “தேவிஸ்ரீ பிரசாத் என்னை அதிகமாக வியக்க வைத்துக்கொண்டே இருக்கிறார். பல சாதனைகள் படைத்து உத்வேகமாக நகர்ந்து கொண்டே இருக்கிறார். அது சிறந்த இசை கலைஞர்களுக்கே உண்டான சிறப்பம்சம். இவருக்கு வெற்றி கண்டிப்பாக வந்தே தீர வேண்டும். இவருக்கு வெற்றி தாமதமாவதை எண்ணி வருத்தப்பட்டு இருக்கிறேன். இவருக்கு உங்கள் ஆதரவு கண்டிப்பாகத் தேவை. திரை இசை பாடல்களைத் தாண்டி, சுயாதீன பாடல்கள் நிறைய வர வேண்டும். சுயாதீன பாடல்கள்தான் இசை கலைஞர்கள் தங்களுடைய முழு திறமையும் வெளிகாட்ட ஒரு பாதையாக இருக்கும்" என்றார்.