11 வருடங்கள் கழித்து சூர்யாவுடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்?

சூர்யா, ஏ.ஆர்.முருகதாஸ்
சூர்யா, ஏ.ஆர்.முருகதாஸ்
Updated on
1 min read

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸூடன் நடிகர் சூர்யா விரைவில் புதிய படத்திற்காக இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு சூர்யா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியானது 'கஜினி'. ரசிகர்களிடையே இந்தப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து 2011-ம் ஆண்டு இதே கூட்டணியில் உருவான 'ஏழாம்அறிவு' படமும் வெற்றிபெற்றது. இந்தப்படத்திற்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸூம் சூர்யாவும் இணையவில்லை. முருகதாஸை பொருத்தவரை அவர் கடைசியாக ரஜினியை வைத்து தர்பார் படத்தை இயக்கியிருந்தார்.

ஆனால் அந்தப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதற்குப் பிறகு, நடிகர் விஜய்யுடன் ‘துப்பாக்கி 2’ படத்தை ஆரம்பிக்க வேண்டும் எனவும் ரசிகர்கள் எதிர்ப்பார்த்திருந்த நிலையில், தற்போது ‘கஜினி2’-க்கான பேச்சுவார்த்தை ஆரம்பித்திருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் சூர்யா - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி மீண்டும் இணைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in