

தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது கார்த்தி நடித்துள்ள ‘சர்தார்’. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் ராஷிகன்னா, ரஜிஷா விஜயன், சங்கி பாண்டே, லைலா, யோகிபாபு உட்பட பலர் நடித்துள்ளனர். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார்.
படம் பற்றி இயக்குநர் மித்ரன் கூறும்போது, ‘‘சர்தார் என்றால் பெர்சிய மொழியில் படைத்தலைவன் என்று பொருள். இது ஸ்பை த்ரில்லர் கதை. நம்மைச் சுற்றியே ஏராளமான உளவாளிகள் இருக்கிறார்கள். உளவு என்பது நாட்டின் ராணுவ ரகசியத்தைத் தெரிந்து கொள்வது மட்டுமல்ல, சாதாரண இடத்தில் இருந்து சர்வதேசம் வரைக்கும் உளவு செல்கிறது. இதில் உலக அரசியலும் இருக்கிறது. சாமானியனை எப்படி பாதிக்கிறது என்பதுதான் இதன் கதை’’ என்றார்.