Published : 06 Oct 2022 09:08 AM
Last Updated : 06 Oct 2022 09:08 AM
வில்லேஜ் ஸ்டுடியோஸ் சார்பில் சி.முருகன், அன்னை கே.செந்தில்குமார் இணைந்து தயாரிக்கும் படம், ‘குளவி’. ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடிக்கிறார். அமீரா வர்மா, ஆனந்த் நாக், கஞ்சா கருப்பு, சிங்கம்புலி, அப்புக்குட்டி உட்பட பலர் நடிக்கின்றனர். விஜயன் முனுசாமி ஒளிப்பதிவு செய்யகிறார். ரகுநந்தன் இசையமைக்கிறார்.
படத்தை இயக்கும் வி.எஸ். செல்வதுரை கூறும்போது, ‘‘ஓர் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்குகிறேன். குடும்பக் கட்டமைப்பு மற்றும் அதில் உள்ள முரண்பாடுகளையும் மனித உறவுகளின் சீரழிவுகளையும் நகைச்சுவையுடன் சொல்கிறோம். படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி இருக்கிறது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT