

அருண் விஜய் நடிக்கும், 'அச்சம் என்பது இல்லையே' படத்தின் அறிமுக வீடியோ வெளியாகியுள்ளது.
கடந்த 2007-ம் ஆண்டு வெளியான அஜித்தின் 'கிரீடம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாவனர் ஏ.எல்.விஜய். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையைத் தழுவி கடந்த ஆண்டு 'தலைவி' படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்திருந்தார்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து ஏ.எல்.விஜய் நடிகர் அருண் விஜய்யுடன் கைகோத்திருக்கிறார். இருவரும் இணையும் படத்திற்கு 'அச்சம் என்பது இல்லையே' என தலைப்பிடப்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்தில் எமி ஜாக்சன் நாயகியாக நடிக்கிறார். இவருடன் நிமிஷா சஜயனும் நடிக்கிறார். ஸ்ரீஸ்ரீ சாய் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் அறிமுக வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.