Published : 04 Oct 2022 04:07 PM
Last Updated : 04 Oct 2022 04:07 PM

'பொன்னியின் செல்வன்1 ஆதிக்கம்' - ஒத்திவைக்கப்பட்ட படங்கள் லிஸ்ட்

தமிழகம்: 'பொன்னியின் செல்வன்1' திரையரங்குகளை ஆக்கிரமித்துள்ள நிலையில், இந்த வாரம் வெளியாகவிருந்த படங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகியுள்ள 'பொன்னியின் செல்வன் 1'திரைப்படம் உலக அளவில் ரூ.250 கோடி வசூலை நெருங்கி சாதனை படைத்து வருகிறது. ரசிகர்களின் கவனம் அப்படத்தை நோக்கி திரும்பியுள்ளதால், மற்ற படங்களை வெளியிட படக்குழுவினர் தயக்கம் காட்டி வருகின்றனர். இன்று ஆயுதபூஜையை (அக்டோபர் 7) உள்ளிட்ட விடுமுறை தினங்களில் படங்கள் வெளியாவது வழக்கம். ஆனால், பெரும்பாலான திரையரங்குகளில் பொன்னியின் செல்வன் படம் ஓடிக்கொண்டிருப்பதால், இந்த வாரம் படங்களை வெளியிட படக்குழுவினர் தயக்கம் காட்டி வருகின்றனர்.

குறிப்பாக, அருண் விஜயின் 'பார்டர்' படமும் சுந்தர்.சி இயக்கத்தில் ஜீவா, ஜெய் நடித்துள்ள 'காஃபி வித் காதல்' படமும் அக்டோபர் 7-ம் தேதி வெளியாக இருந்த நிலையில் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. அரவிந்த் சாமி - த்ரிஷா நடித்துள்ள 'சதுரங்க வேட்டை 2' திரைப்படமும் வரும் 7-ம் வெளியாக இருந்தது. அதுவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதேபோல், சிவா, பிரியா ஆனந்த் நடிக்கும் 'காசேதான் கடவுளடா' மற்றும் ரீ உள்ளிட்ட படங்கள் இந்த வாரம் வெளியாகாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x