பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்தார் கமல்ஹாசன்

பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்தார் கமல்ஹாசன்
Updated on
1 min read

கமல்ஹாசன் தனது 63-வது பிறந்தநாளான நேற்று வழக்கமான கொண்டாட்டங்கள், ரசிகர்கள் சந்திப்பு ஆகிய நிகழ்வுகளைத் தவிர்த்தார்.

நடிகர் கமல்ஹாசனின் 63-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. கமல் ஹாசன் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 7-ம் தேதி தனது பிறந்தநாளின்போது நற்பணி இயக்கத்தினரை சந்திப்பதை யும், நலத்திட்ட உதவிகள் வழங்குவதையும் தொடர்ந்து செய்து வருகிறார்.

இந்நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வருவதால் இந்த ஆண்டில் தனது பிறந்தநாள் விழா கொண்டாட்டங்களைத் தவிர்க்குமாறு ரசிகர்களுக்கு கமல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேண்டுகோள் விடுத்தார். இதனால் நேற்று அவரது ரசிகர்கள் பெரிதாக கொண்டாட்டங்களில் ஈடுபடவில்லை.

பிறந்தநாள் கொண்டாட் டத்தை தவிர்த்து தற்போது ‘சபாஷ் நாயுடு’ படத்தின் வேலை களில் கவனம் செலுத்திவரும் கமல்ஹாசனுக்கு திரையுல கினர் பலரும் தொலைபேசி, இணையம் வழியே வாழ்த்துகளை தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in