நடிகர் சங்கத்தில் அனைவரையும் பிரித்து சண்டை போடும் நிலை உருவாகிவிட்டது: சரத்குமார்

நடிகர் சங்கத்தில் அனைவரையும் பிரித்து சண்டை  போடும் நிலை உருவாகிவிட்டது: சரத்குமார்
Updated on
1 min read

அனைவரையும் பிரித்து சண்டை போடும் அளவுக்கு நிலைமையை உருவாக்கி விட்டார்கள் என சரத்குமார் காட்டமாக தெரிவித்திருக்கிறார்.

நடிகர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகளான சரத்குமார் மற்றும் ராதாரவி இருவரும் நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில், இன்று சென்னை திரும்பிய சரத்குமார், விமானநிலையத்தில் அளித்த பேட்டியில், "பொதுக்குழு இடம் மாற்றத்துக்கே நோட்டீஸ் அனுப்பியிருக்க வேண்டும். இடம் மாற்றத்தை உடனே அனைவருக்கும் குறுந்தகவல் அனுப்புவதோ அல்லது தொலைபேசியில் அனைவருக்கும் சொல்வதோ முடியாத காரியம். பொதுக்குழுவுக்கு வர வேண்டும் என்று நினைத்தவர்கள் கலந்து கொண்டிருக்க மாட்டார்கள். அப்படியிருக்கும் போது, இதை பொதுக்குழுவாக எடுத்துக் கொள்ள முடியாது.

முதலில் 150 கோடி ஊழல் என்றார்கள். பிறகு 60 கோடி என்றார்கள். தற்போது 167 கோடி என்கிறார்கள். அவர்கள் கேட்பதற்கு எல்லாம் கணக்கு கொடுத்தாகிவிட்டது. என்னைவிட 100 வாக்குகள் அதிகமாக பெற்றுதான் வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஏற்கெனவே குற்றச்சாட்டை வைத்துவிட்டோம், அதை நிரூபிக்க வேண்டும் என பணியாற்றி வருகிறார்கள்.

நடிகர் சங்கம் என்பது ஒற்றுமையான சங்கமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் போய், இன்றைக்கு அனைவரையும் பிரித்து சண்டை போடும் அளவுக்கு உருவாக்கிவிட்டார்கள்" என்று தெரிவித்திருக்கிறார் சரத்குமார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in