

ஜீ மீடியா சார்பில் ஜெய விஜய், கோவை எஸ். பி. மோகன் ராஜ் தயாரித்துள்ள படம், ‘பவுடர்’. இதை விஜய் இயக்கியுள்ளார். செய்தி தொடர்பாளர் நிகில் முருகன் நாயகனாக நடிக்கிறார். அனித்ரா நாயர், சாந்தினி தேவா, 'மொட்டை' ராஜேந்திரன், சிங்கம்புலி உட்பட பலர் நடித்துள்ளனர். ராஜபாண்டி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு லியாண்டர் லீ மார்ட் இசை அமைக்கிறார்.
இந்தப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. இயக்குநர்கள் கே.பாக்யராஜ், வசந்த், பிரபு சாலமன், சசி, எழில் உட்பட பலர் கலந்துகொண்டனர். படம்பற்றி இயக்குநர் விஜய் கூறும்போது, “ஒரே இரவில் நடக்கும் பரபரப்பான சம்பவங்களை வைத்து உருவாகி உள்ள த்ரில்லர் படம் இது. முழு படத்தையும் இரவில் மட்டுமே படமாக்கி இருக்கிறோம். கரோனா காலத்தில் பெரும் சவால்களுக்கு மத்தியில் இதன் படப்பிடிப்பை முடித்துள்ளோம். நிகில் முருகன் சிறப்பான வேடத்தில் நடித்திருக்கிறார்’’ என்றார்.