

சத்யராஜ், வசந்த் ரவி நடிக்கும் ஆக்ஷன் த்ரில்லர் படம் ’வெப்பன்’. இதை மில்லியன் ஸ்டுடியோ சார்பில் எம்.எஸ். மன்சூர் வழங்குகிறார். பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசை அமைக்கிறார். குகன் சென்னியப்பன் இயக்குகிறார். இவர், ‘சவாரி’ என்ற படத்தையும் ‘வெள்ளை ராஜா’ என்ற வெப் தொடரையும் இயக்கியவர்.
படம் பற்றி அவர் கூறும்போது, ‘‘இது சஸ்பென்ஸ், ஆக்ஷன் த்ரில்லர் கதையை கொண்ட படம். வழக்கமான த்ரில்லர் படம் போல் இல்லாமல் தனித்துவமாக இருக்கும். அது என்ன என்பதை இப்போது கூற இயலாது. சத்யராஜ் சிறந்த நடிகர். இதுவரை அவர் நடித்திராத பாத்திரத்தில் இதில் நடிக்கிறார். வசந்த் ரவிக்கும், அவருக்கும் சமமான கேரக்டர். சென்னை மற்றும் மலைப்பிரதேசம் ஒன்றில் கதை நடக்கிறது’’ என்றார். இந்தப் படத்தின் டைட்டில் லுக் நடிகர் சத்யராஜின் பிறந்த நாளான இன்று வெளியாகிறது.