

'2.0' படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து விஜய் பேசினார்.
பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ‘பைரவா’ படத்தின் இறுதிநாள் படப் பிடிப்பு எம்.ஜி.ஆர் திரைப்பட கல்லூரியில் நேற்று நடை பெற்றது. இப்படத்தை ஜனவரி 12-ம் தேதி வெளியிட திட்ட மிடப்பட்டுள்ளது.
‘பைரவா’ படப்பிடிப்பு முடிந்த பிறகு, அதே இடத்தில் ‘2.0’ படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருவதை அறிந்த விஜய், படப்பிடிப்பு தளத்துக்கு சென்று ரஜினியை சந்தித்து பேசினார். இச்சந்திப்பு சுமார் 10 நிமிடங்கள் நீடித்தது. சந்திப்பின்போது ரஜினி காந்த், ‘2.0’ படத்தின் கெட்டப் பில் இருந்ததால் இருவரும் புகைப்படம் எடுத்துக் கொள்ள வில்லை என்று விஜய்க்கு நெருக்கமானவர்கள் தெரி வித்தனர்.