

இரட்டை இயக்குநர்களான ஜேடி-ஜெர்ரி விக்ரம், அஜித் நடித்த ‘உல்லாசம்’ படம் மூலம் இயக்குநர்களாக அறிமுகமானார்கள். அடுத்து ‘விசில்’ படத்தை இயக்கினர். சமீபத்தில், சரவணன் அருள் நடித்த ‘தி லெஜண்ட்’ படத்தை இயக்கி இருந்தனர். இந்தப் படம் கடந்த ஜூலை மாதம் வெளியானது.
இதையடுத்து ‘விசில்’ படத்தின் அடுத்த பாகத்தை இயக்க இருக்கின்றனர். விக்ரமாதித்யா, ஷெரின், காயத்ரி ரகுராம் நடித்த ‘விசில்’ படம், 2003-ம் ஆண்டு வெளியானது. டி.இமான் இசை அமைத்திருந்த இந்தப் படம் அப்போது கவனிக்கப்பட்டது. இதன் இரண்டாம் பாகத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் இப்போது நடந்து வருகின்றன. நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்கள் இன்னும் முடிவாகவில்லை என்று கூறப்படுகிறது.