

'ராகவன் இஸ் பேக்' என்ற பெயரில் இணையத் தொடர் ஒன்றை உருவாக்க கெளதம் மேனன் - தனுஷ் திட்டமிட்டுள்ளனர்.
'அச்சம் என்பது மடமையடா' படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடிக்கும் 'என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் கெளதம் மேனன். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நவம்பர் 25-ம் முதல் துவங்க இருக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்புக்கு இடையே தன்னுடைய இணையத் தொடர் திட்டம் தொடர்பாக தனுஷிடம் தெரிவித்திருக்கிறார் கெளதம் மேனன். 'ராகவன் இஸ் பேக்' என்ற அத்தொடருக்கு பெயரிட்டு இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
இந்த எண்ணம் தனுஷுக்குப் பிடித்துவிடவே, அதனை நானே தயாரிக்கிறேன் என்று ஒரு தொகையை கெளதம் மேனனுக்கு அட்வான்ஸாக உடனடியாக கொடுத்திருக்கிறார். 'என்னை நோக்கி பாயும் தோட்டா' உள்ளிட்ட 2 படங்களை முடித்துவிட்டு, இணையத் தொடர் பணிகளை கவனிக்கத் திட்டமிட்டு இருக்கிறார் கெளதம் மேனன்.