

அனுராஜ் மனோகர் இயக்கத்தில் ஷேன் நிகம் நடித்து வரவேற்பைப் பெற்ற மலையாளப் படம், ‘இஷ்க்’. இது தமிழில் ‘ஆசை’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. படத்தை இயக்கியுள்ள ஷிவ் மஹோ கூறியதாவது: ‘ஜீரோ’ படத்துக்குப் பிறகு நான் இயக்கியுள்ள படம் இது. மலையாள ரீமேக் என்றாலும் தமிழுக்காக மாற்றங்களைச் செய்திருக்கிறோம். அஜித் நடித்த ‘ஆசை’ படத் தலைப்பு, இந்தப் படத்துக்கு கச்சிதமாகப் பொருந்தியது. இதனால் அந்தப் படத்தைத் தயாரித்த ஆலயம் பிலிஸ்ம்ஸில் அனுமதி பெற்று பயன்படுத்தி இருக்கிறோம்.
இதில் கதிர், திவ்ய பாரதி, லிங்கா, பூர்ணா உட்பட பலர் நடித்துள்ளனர். கதிர், இந்தப் படத்துக்காகத் தன்னைச் சிறப்பாக மாற்றியிருக்கிறார். ரேவா இசை அமைத்திருக்கிறார். பாபு குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். பேஷன் ஸ்டூடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம், ஜெயராம், ரமேஷ் பிள்ளை தயாரித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இவ்வாறு ஷிவ் மஹோ தெரிவித்தார்.