

சமந்தாவுக்கு சரும பிரச்னை ஏற்பட்டு இருப்பதால், வெளிநாட்டில் சிகிச்சைப் பெற இருப்பதாகக் கூறப்படுகிறது.
நடிகை சமந்தா, இப்போது விஜய தேவரகொண்டாவுடன் ‘குஷி’ படத்தில் நடித்து வருகிறார். இந்தியிலும் நடிக்க இருக்கிறார்.
அவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன் சரும பிரச்னை ஏற்பட்டது. அதிக வெளிச்சத்தில் நடித்ததால் அலர்ஜி ஏற்பட்டதாகக் கூறியிருந்தார். இதன் காரணமாக ‘அஞ்சான்’ படப்பிடிப்பின்போதும் அவர் வெளிநாடு சென்று சிகிச்சைப் பெற்று வந்தார்.
இப்போது அந்தப் பிரச்னை மீண்டும் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் வெளிநாடு சென்று சிகிச்சைப் பெற இருப்பதாகக் கூறப்படுகிறது.இதை அவர் தரப்பு உறுதிப்படுத்தவில்லை.