Published : 21 Sep 2022 09:54 AM
Last Updated : 21 Sep 2022 09:54 AM

ஐஸ்வர்யா இயக்கத்தில் கவுரவ வேடத்தில் ரஜினி!

தனுஷ் நடித்த ‘3' படத்தை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அடுத்து, ‘வை ராஜா வை' படத்தை இயக்கினார். இது 2015-ம் ஆண்டு வெளியானது. கடந்த சில மாதங்களுக்கு முன் ‘முசாபிர்’ என்ற இசை ஆல்பத்தை உருவாக்கினார். இந்நிலையில், மீனு அரோரா தயாரிக்கும் இந்திப் படத்தை இயக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாயின.

ஆனால், அவர் இப்போது தமிழில் படம் இயக்க இருக்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். இதில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடிக்க இருக்கிறார். படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x