

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் புதிய படத்தின் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டு இருக்கிறது.
கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் படப்பணிகள் முடிந்து தணிக்கைக்கு விண்ணப்பித்திருக்கிறது படக்குழு. நவம்பர் 11-ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இப்படத்தைத் தொடர்ந்து அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் படத்தின் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டு இருக்கிறது. இருவருமே கதை விவாதத்தில் ஈடுபட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விரைவில் இருவரது படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இதர தொழில்நுடப் கலைஞர்கள் இறுதி செய்யப்பட இருக்கிறது.
அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான மலையாள படமான 'பிரேமம்' தென்னிந்தியாவில் பெரும் வரவேற்பைப் பெற்ற படமாகும். அப்படத்திற்குப் பிறகு அவருடைய இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருப்பது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும், சிம்பு நடிக்கும் படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என 4 மொழிகளிலும் ஒரே சமயத்தில் உருவாக்க திட்டமிட்டு இருக்கிறார் அல்போன்ஸ் புத்திரன்