பழம்பெரும் நடிகை ஜெயக்குமாரியிடம் நேரில் நலம் விசாரித்த அமைச்சர் மா.சுப்ரமணியம்

பழம்பெரும் நடிகை ஜெயக்குமாரியிடம் நேரில் நலம் விசாரித்த அமைச்சர் மா.சுப்ரமணியம்
Updated on
1 min read

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பழம்பெரும் நடிகை ஜெயக்குமாரியை மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

'நூற்றுக்கு நூறு', 'தேடி வந்த லட்சுமி', 'இவள் ஒரு சீதை' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து புகழ்பெற்றவர் பழங்கால நடிகை ஜெயக்குமாரி. எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் நாயகியாக வலம் வந்தவர், தற்போது சென்னை வேளச்சேரியில் வாடகை வீட்டில் தனது மகன்களுடன் வசித்து வருகிறார்.

72 வயதான இவர், இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், மருத்துவச் செலவுக்கு பணமில்லாமல் சிரமப்பட்டு வந்தார். இந்நிலையில், அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த செய்தி அறிந்த மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகை ஜெயக்குமாரியை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். அவருக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். அவரது செலவுக்கு பத்தாயிரம் பணம் கொடுத்ததுடன், முதியர் உதவித்தொகை பெற ஆவன செய்யப்படும் என உறுதியளித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in