மதத்தால் பிரிக்க நினைப்பவர்கள் மனிதர்களே கிடையாது - நடிகர் மயில்சாமி 

நடிகர் மயில்சாமி
நடிகர் மயில்சாமி
Updated on
1 min read

''இஸ்லாத்தையும், கிறிஸ்துவத்தையும், இந்து மதத்தையும் பிரித்துப் பேசுபவர்கள் மனிதர்களே கிடையாது. மூன்று மதத்தினரும் ஒன்றாக சேர்ந்திருப்பது தான் இந்தியா. உங்கள் ஓட்டுகளுக்காக தயவு செய்து மக்களை ஏமாற்றாதீர்கள்'' என்று நடிகர் மயில்சாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் மயில்சாமி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ''சாதி, மதம் பேதம் பார்க்காமல் மற்றவர்களுக்கு தர்மம் செய்ய வேண்டும். 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்பது தான் சரியாக இருக்கும். எனக்கு பீட்டர் அல்போன்ஸூம் வேண்டும், முகமது அலியும் வேண்டும், அனந்த ராமனும் வேண்டும். இதில் ஒருவர் வேண்டாம் என பிரித்து பார்ப்பவர் மனிதனே கிடையாது.

உண்மையை பேசும்போது நாம் பயப்பட வேண்டிய தேவையில்லை. நான் இப்போதும் சொல்கிறேன். இஸ்லாத்தையும், கிறிஸ்துவத்தையும், இந்து மதத்தையும் பிரித்து பேசுபவர்கள் மனிதர்களே கிடையாது. மூன்று பேரும் ஒன்றாக சேர்ந்திருப்பது தான் இந்தியா. உங்கள் ஓட்டுகளுக்காக தயவு செய்து மக்களை ஏமாற்றாதீர்கள். மக்கள் ஒருபோதும் ஏமாறமாட்டார்கள். உங்களுக்குத்தான் திருப்பி பதிலடி கொடுப்பார்கள். உலகத்தில் எங்கு சென்றாலும் உழைப்பு தான் முக்கியம் மொழி முக்கியமில்லை'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in