Published : 17 Sep 2022 03:30 PM
Last Updated : 17 Sep 2022 03:30 PM
சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் இரண்டு நாளில் ரூ.20 கோடி வசூலை நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எழுத்தாளர் ஜெயமோகன் கதையை அடிப்படையாக கொண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'. சித்திகி இத்னானி நாயகியாக நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஐசரி கணேசன் தயாரித்துள்ள படத்தில் ராதிகா சரத்குமார், மலையாள நடிகர் சித்திக், அப்புக்குட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
இந்நிலையில், படம் முதல் நாள் ரூ.10.86 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக திரை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டாவது நாளான நேற்று (செப்.16) ரூ.8.51 கோடி வசூலித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு நாட்களையும் சேர்த்து படம் ரூ.19.37 கோடி வசூலித்துள்ளது. வரும் நாட்களில் படத்தின் வசூல் கூடலாம் என திரைவர்த்தகர்கள் கணித்துள்ளனர். படம் ரூ.30 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
#VTK TN Box office:
Gross :
Day 1 (Thursday) - ₹ 10.86 Crs
Day 2 (Friday) - ₹ 8.51 Crs (No Early Morning Special FDFS shows)
Expecting solid numbers for Today and tomorrow.. @SilambarasanTR_ - Dir @menongautham combo is setting the TN Box office on— Ramesh Bala (@rameshlaus) September 17, 2022
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT