

சென்னை: நடிகர் தனுஷின் நடிப்பில் உருவாகி உள்ள ‘நானே வருவேன்’ திரைப்படத்தின் டீசர் த்ரில்லர் ஜானரில் பார்வையாளர்களை மிரட்டுகிறது. சுமார் 01.41 நிமிடங்கள் ரன் டைம் கொண்டுள்ளது இந்த டீசர். அண்மையில் இந்தப் படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி இருந்தது.
‘வி கிரியேஷன்ஸ்’ சார்பில் எஸ்.தாணு இந்தப் படத்தை தயாரித்துள்ளார். இயக்குனர் செல்வராகவன் எழுதி இயக்கி உள்ளார். தனுஷ், யோகி பாபு, பிரபு, இந்துஜா ஆகியோருடன் வெளிநாட்டு நடிகை எல்லி இந்தப் படத்தில் நடித்துள்ளார். இந்த மாத இறுதியில் இந்தப் படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷ், செல்வராகவன் மற்றும் யுவன் கூட்டணியில் படம் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. இந்த மூவரின் கூட்டணி வெற்றிக் கூட்டணி காதல் கொண்டேன், புதுப்பேட்டை போன்ற படங்களை அதற்கு உதாரணமாக சொல்லலாம்.
வில்லத்தனம், பயம் என இரண்டிலும் தனுஷ் தனது நடிப்பால் இந்த டீசரில் கவனம் ஈர்த்து இருக்கிறார். அவருக்கு துணையாக செல்வராகவன், பிரபு, இந்துஜா, யோகி பாபு போன்ற நடிகர்களும் நடித்துள்ளனர்.