தேசிய சினிமா தினம் தேதி திடீர் மாற்றம்!

தேசிய சினிமா தினம் தேதி திடீர் மாற்றம்!
Updated on
1 min read

இந்திய மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் சங்கம் வரும் 16-ம் தேதியை, தேசிய சினிமா தினமாக அறிவித்திருந்தது. அன்று இந்தியா முழுவதும் உள்ள சுமார் 4000 மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் ரூ.75 எனவும் கூறியிருந்தனர். இது தமிழ்நாட்டுக்குப் பொருந்தாது என்று மல்டிபிளக்ஸ் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப்பச்சன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘பிரம்மாஸ்திரா’ படத்துக்கு வட இந்தியாவில் வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் வசூல் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் அதிக பட்ஜெட்டில் உருவான அதன் வியாபாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக தேசிய சினிமா தினத்தை வரும் 23-ம் தேதிக்கு மாற்றி வைத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in