

அதர்வா, தான்யா ரவிச்சந்திரன், அருண் பாண்டியன் உட்பட பலர் நடிக்கும் படம், ‘டிரிக்கர்’. சாம் ஆன்டன் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
பிரமோத் பிலிம்ஸ் சார்பில் ஸ்ருதி மற்றும் மிராக்கிள் மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை வரும் 23-ம் தேதி ரோமியோ பிக்சர்ஸ் வெளியிடுகிறது. படம் பற்றி இயக்குநர் சாம் ஆன்டன் கூறியதாவது: இந்தப் படம் அனைத்து தரப்பு ரசிகர்களும் விரும்பும் வகையில் இருக்கும். குழந்தை கடத்தல் கதை தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல என்றாலும் எதார்த்த வாழ்க்கையில் எந்த அளவுக்கு இந்த மாதிரியான சம்பவங்கள் தொடர்பு உடையதாக இருக்கிறது என்பதை சொல்லி இருக்கிறோம். கதைக்காக பல ஆய்வுகளைச் செய்தோம். போலீஸ் அண்டர்கவர் அதிகாரியாக அதர்வா நடித்திருக்கிறார். படத்தில் 5 சண்டைக்காட்சிகள் இருக்கிறது. ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருக்கும். இவ்வாறு சாம் ஆன்டன் கூறினார்.