தமிழ் சினிமா
பொன்னியின் செல்வன் டிஜிட்டல் உரிமை ரூ.125 கோடிக்கு விற்பனை
கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை திரைப்படமாக மணிரத்னம் இயக்கியுள்ளார். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இரண்டு பாகமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் வரும் 30-ம் தேதி வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இதற்கிடையே இந்தப் படத்தின் டிஜிட்டல் ஒளிப்பரப்பு உரிமையை அமேசான் பெற்றுள்ளது. இரண்டு பாகத்தையும் ரூ.125 கோடிக்கு அந்நிறுவனம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
