

மறைந்த இசையமைப்பாளர் சந்திரபோஸ் குடும்பத்துக்கு தனது அறக்கட்டளை மூலம் விஷால் உதவி செய்துள்ளார்.
‘மனிதன்’, ‘விடுதலை’, ‘அண்ணா நகர் முதல் தெரு’ ‘மாநகர காவல்’ உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு இசையமைத்தவர் சந்திரபோஸ். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
அதன்பின் அவரது குடும்பம் வறுமையில் இருந்து வருகிறது. குறிப்பாக அவரது மனைவி ராஜகுமாரி மருத்துவ செலவுக்குக் கூட பண வசதி இல்லாமல் இருந்து வந்தார். இதனை அறிந்த தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் நடிகர் விஷால் நேற்று ராஜகுமாரியை அழைத்து தனது தேவி அறக்கட்டளை மூலம் அவரது மருத்துவ செலவுக்காக நிதி உதவியை வழங்கியுள்ளார்.