

சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் 100-வது படத்தில் நடிகர் விஜய் நடிப்பார் என நடிகர் ஜீவா தெரிவித்துள்ளார்.
நடிகர் ஜீவா ‘ஆஹா’ ஓடிடித் தளத்தில் 'சர்கார் வித் ஜீவா' என்ற விளையாட்டு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியின் ப்ரமோஷனில் கலந்துகொண்ட ஜீவா பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, 'சூப்பர் குட் ஃபிலிம்ஸின் 100வது படத்தில் விஜய் நடிப்பாரா?' என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த நடிகர் ஜீவா, ''நிச்சயமாக நடிப்பார். ஒரு வாரம் முன்புதான் ஆர்.பி.சௌத்ரியுடன் விஜய் சந்தித்திருக்கிறார். 100-வது படத்தில் நடிக்கிறேன் என்பது போல் கூறியிருக்கிறார். நானும் அதில் நடிப்பதற்காக என் அப்பாவிடம் கேட்டிருக்கிறேன். சம்பளம் கொடுக்கவில்லை என்றாலும் நடிக்கத் தயாராக இருக்கிறேன். ஆக, சூப்பர் குட் ஃபிலிம்ஸ் இயக்கும் 100-வது படத்தில் விஜய் தான் நடிப்பார் எனத் தெரிகிறது'' என்றார்.
விஜய் தற்போது ‘வாரிசு’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார். இதையடுத்து அவர் லோகேஷ் கனகராஜுடன் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.