பணிப்பெண் இல்லத் திருமணத்தில் விக்ரம் 

திருமண விழாவில் நடிகர் விக்ரம்
திருமண விழாவில் நடிகர் விக்ரம்
Updated on
1 min read

நடிகர் விக்ரம் தனது வீட்டில் நாற்பது வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வரும் பணிப்பெண் மேரியின் இல்லத் திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான 'கோப்ரா' திரைப்படம் எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொண்டது. இதையடுத்து விக்ரம் பா.ரஞ்சித்துடன் புதிய படம் ஒன்றில் இணைகிறார். இதற்கான படப்பிடிப்பு அண்மையில் பூஜையுடன் தொடங்கியது. தன்னுடைய படப்பிடிப்புகளுக்கிடையில் விக்ரம் திருமணம் ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்.

பொதுவாக விக்ரம் தன் வீட்டில் பணியாற்றும் சக ஊழியர்களின் குடும்பத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது வழக்கம். இந்நிலையில் சீயான் விக்ரமின் வீட்டில் பல ஆண்டுகளாக பணியாற்றி மறைந்தவர் ஒளிமாறன். அவரது மனைவியான மேரி என்பவரும் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவரது வீட்டில் பணியாற்றி வருகிறார்.

இவர்களது வாரிசான தீபக் என்பவருக்கும், மணமகள் வர்ஷினி என்பவருக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திருப்போரூர் கந்தசாமி ஆலயத்தில் நடைபெற்ற தீபக் - வர்ஷினியின் திருமணத்தில் சீயான் விக்ரம் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in