“20 வருடங்களில் 25 படங்கள்தான்... குவான்டிட்டியை விட குவாலிட்டி முக்கியம்” - ஜெயம் ரவி

பிறந்தநாள் நிகழ்வில் ஜெயம் ரவி
பிறந்தநாள் நிகழ்வில் ஜெயம் ரவி
Updated on
1 min read

''குவான்டிட்டியை விட குவாலிட்டிதான் முக்கியம் என கருதுகிறேன். 4 படங்கள் நடித்தாலும் குவாலிடியாக நடித்தால் போதும் என நினைக்கிறேன்'' என்று ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.

நடிகர் ஜெயம்ரவி தனது பிறந்தநாளையொட்டி இன்று ரசிகர்களை சந்தித்து புகைப்படங்களை எடுத்துக்கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ''சினிமாவுக்கு நான் வந்து 20 வருடங்கள் கடந்து விட்டன. ஆனால், 25 படங்களில் மட்டுமே நடித்திருக்கிறேன். சக நடிகர்களுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை குறைவு தான். எனக்கு பிறகு வந்தவர்கள் 40, 45 படங்களில் நடித்துவிட்டனர். நான் 25 படங்களில் மட்டுமே நடித்திருக்கிறேன். ஏன் என்று யோசித்து பார்த்தால், குவாலிட்டிக்கு மதிப்பு கொடுக்கிறேன். குவான்டிட்டியை விட குவாலிட்டிதான் முக்கியம் என கருதுகிறேன். 4 படங்கள் நடித்தாலும் குவாலிடியாக நடித்தால் போதும் என நினைக்கிறேன்.

'ஜெயம்' படம் வெளியாகி 150 நாட்கள் கடந்து ஓடி பெரிய வெற்றி பெற்றது. அப்படியொரு ஹிட்டுக்கு பிறகு பிறகு 8 மாதம் வீட்டில் சும்மாவே இருந்தேன். நானே யோசித்தேன் 'சும்மாவே இருக்கோமே' என்று. அப்போதுதான் அப்பா சொன்னார், 'நல்ல படம் வரும் வரைக்கும் சும்மா உட்காரு தப்பில்ல. ஹிட் கொடுத்துட்டோமேன்னு படம் பண்ணாத' என்று சொன்னார். அதை நான் இன்றும் பின்பற்றிக்கொண்டிருக்கிறேன். அதனால், என்னுடைய திரைப்பயணித்தில் சரியாக ஓடாத படங்களின் விகிதம் குறைந்திருக்கிறது. என்னுடைய வெற்றிக்கு அதுதான் காரணம் என நம்புகிறேன். நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என நினைக்கிறேன். நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன்'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in