‘8 தோட்டாக்கள்’ இயக்குநர் ஸ்ரீகணேஷ் திருமணம்: திரையுலகினர் வாழ்த்து

‘8 தோட்டாக்கள்’ இயக்குநர் ஸ்ரீகணேஷ் திருமணம்: திரையுலகினர் வாழ்த்து
Updated on
1 min read

‘8 தோட்டாக்கள்’, 'குருதி ஆட்டம்' படத்தின் இயக்குநர் ஸ்ரீகணேஷுக்கும் நடிகை சுகாசினிக்கும் புதன்கிழமை திருமணம் நடைபெற்றது.

இயக்குநர் மிஷ்கினிடம் உதவி இயக்குநராக இருந்து, கடந்த 2017-ம் ஆண்டு வெளியான '8 தோட்டாக்கள்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி கவனம் ஈர்த்தவர் ஸ்ரீகணேஷ். இந்தப் படம் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது.

இதைத்தொடர்ந்து நீண்ட நாட்களுக்குப்பிறகு அதர்வா நடிப்பில் உருவான 'குருதி ஆட்டம்' படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார் ஸ்ரீகணேஷ். படம் எதிர்மறையான விமர்சனங்களைப்பெற்ற நிலையில், உடனே தனது அடுத்த படங்களில் குறையை சரி செய்துகொள்வதாக கூறி மன்னிப்பும் கேட்டார். அவரது இந்த செயல் ரசிகர்களை பெரிதும் ஈர்த்தது.

இந்நிலையில், தற்போது தன்னுடைய நீண்ட நாள் காதலியும், நடிகையுமான சுகாசினி சஞ்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார் ஸ்ரீகணேஷ்.சுகாசினி சஞ்சீவ் உதயநிதி நடிப்பில் வெளியான 'நெஞ்சுக்கு நீதி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் வனம், சர்பத், சீதக்காதி, போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

இவர்கள் இருவருக்கும் நேற்று காலை திருமணம் நடைபெற்ற நிலையில், மாலை திருமண வரவேற்பு நிகழ்வு நண்பர்கள் சூழ நடந்தது. எளிமையான முறையில் நடந்த இவர்களின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in