

‘இமைக்கா நொடிகள்’, ‘அடங்கமறு’, ‘சங்கத்தமிழன்’, ‘அரண்மனை 3’ படங்களில் நடித்திருப்பவர் ராஷி கன்னா. தனுஷுடன் அவர் நடித்துள்ள ‘திருச்சிற்றம்பலம்’ சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.
அடுத்து கார்த்தியின் ‘சர்தார்’ படத்தில் நடித்துள்ள ராஷி கன்னா, ட்விட்டரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ‘என் ட்விட்டர் கணக்கை செயலிழக்க வைத்துவிட்டேன். இன்ஸ்டாகிராமில் தொடர்வேன்’ என்று தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தென்னிந்திய சினிமா பற்றி அவர் தவறாகக் கூறியதாக சர்ச்சையில் சிக்கினார். அப்போது அவர் மீது கடுமையான விமர்சனங்கள், ட்விட்டரில் வைக்கப்பட்டன. அவர் விலக இதுவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.