Published : 07 Sep 2022 12:21 PM
Last Updated : 07 Sep 2022 12:21 PM

‘சைரன்’ படத்தில் கீர்த்தி சுரேஷ், அனுபமா!

ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரிக்கும் படம், ‘சைரன்’. ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்குகிறார். இவர், விஸ்வாசம், இரும்புத்திரை படங்களில் பணியாற்றியவர்.

ஜெயம் ரவி ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மற்றொரு நாயகியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார்.

காமெடி மட்டுமல்லாமல் கதையுடன் கூடிய கேரக்டரில் யோகிபாபு, சமுத்திரக்கனி உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு செல்வகுமார் எஸ்.கே.ஒளிப்பதிவு செய்கிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x