“தெய்வம்... இல்லன்னா பேய்” - வெளியானது வெந்து தணிந்தது காடு ட்ரெய்லர்

“தெய்வம்... இல்லன்னா பேய்” - வெளியானது வெந்து தணிந்தது காடு ட்ரெய்லர்
Updated on
1 min read

சென்னை: நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படமான வெந்து தணிந்தது காடு படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. சுமார் 2.19 நிமிடங்கள் ரன் டைம் கொண்டுள்ளது இந்த ட்ரெய்லர்.

வரும் செப்டம்பர் 15-ம் தேதி அன்று நடிகர் சிலம்பரசன் மற்றும் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் காம்போவில் உருவாகி உள்ள இந்த படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். அனைத்து பாடல்களையும் தாமரை எழுதி உள்ளார். சித்தி இத்னானி, ராதிகா, சித்திக், நீரஜ் மாதவ், ஏஞ்சலினா ஆப்ரஹம் முதலானோர் இதில் நடித்துள்ளனர். இந்தப் படம் சிம்பு, கவுதம் வாசுதேவ் மேனன் காம்போவில் உருவாகி உள்ள மூன்றாவது திரைப்படம். இதற்கு முன்னதாக ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ மற்றும் ‘அச்சம் என்பது மடமையடா’ என இரண்டு திரைப்படங்கள் வெளியாகி இருந்தது.

கேங்ஸ்ட்டர் கதைக்களத்தை கொண்டுள்ளது இந்த படம். முத்து என்ற கதாபாத்திரத்தில் சிலம்பரசன் நடித்துள்ளார். நகரம், கிராமம் என கதைக்களம் நகரும் என தெரிகிறது. தனிநபர் ஒருவரின் வாழ்க்கை கதை என ட்ரெய்லர் ஆரம்பமாகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in