Published : 02 Sep 2022 01:29 PM
Last Updated : 02 Sep 2022 01:29 PM
விக்ரம் நடித்துள்ள 'கோப்ரா' திரைப்படத்தின் வசூல் இரண்டாவது நாளான நேற்று கடும் சரிவை சந்தித்ததுள்ளது.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'கோப்ரா'. ஸ்ரீநிதி ஷெட்டி, மிருளானி ரவி, மீனாட்சி, கே.எஸ்.ரவிக்குமார், இர்ஃபான் பதான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். லலித்குமார் தயாரித்துள்ள இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அதிக்கப்படியான திரைகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் ஆகஸ்ட் 31-த் தேதி திரையரங்குகளில் வெளியான 'கோப்ரா' திரைப்படம் முதல் நாளில் ரூ.9.28 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாவது நாள் எதிர்மறையான விமர்சனங்கள் காரணமாக அப்படியே கிட்டத்தட்ட 3 மடங்கு குறைந்துள்ளது. அதன்படி, ரூ.2.56 கோடி ரூபாய் மட்டுமே இரண்டாவது நாள் படம் வசூலித்துள்ளது. படத்தின் நீளம் காரணமாக 20 நிமிட காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
#Cobra TN Box Office
— Manobala Vijayabalan (@ManobalaV) September 2, 2022
FREE FALL of 72.41%.
Day 1 - ₹ 9.28 cr
Day 2 - ₹ 2.56 cr
Total - ₹ 11.84 cr
TOUGH to recover.#ChiyaanVikram
Sign up to receive our newsletter in your inbox every day!