

‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘கோ’ ஆகிய படங்களைத் தொடர்ந்து, ரெட் ஜெயண்ட் மற்றும் ஆர்எஸ் இன்ஃபோடைன்மென்ட் (Red Giant Movies & RS Infotainment) நிறுவனங்கள் மீண்டும் இணைந்து ‘விடுதலை’ படத்தினை வெளியிடுகின்றனர்.
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் படம் 'விடுதலை'. இப்படத்தில், பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் கோ படங்களைத் தொடர்ந்து ரெட்ஜெயண்ட் மற்றும் ஆர்எஸ் இன்ஃபோடைன்மென்ட் (Red Giant Movies & RS Infotainment) நிறுவன தயாரிப்பாளர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் எல்ட்ரெட் குமார் மீண்டும் இணைந்து ‘விடுதலை’ படத்தை வெளியிட உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.