

நடிகர் விஜய் இப்போது தனது 66வது படமாக வாரிசு படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு சினிமா இயக்குநர் வம்சி பைடிபள்ளி இதன் இயக்குநராகவும், ராஷ்மிகா மந்தனா நாயகியாகவும் பணிபுரிந்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக இன்று ஹைதராபாத் சென்றுள்ளார் விஜய்.
அதே விமானத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமாரும் பயணித்துள்ளார். அப்போது விஜய் உடன் எடுத்த புகைப்படத்தை தனது வலைதளங்களில் பகிர்ந்து, "ஹைதராபாத்துக்கு இவ்வளவு நல்ல ஃப்ளைட் இதுவரை இருந்ததில்லை... எனக்கு பிடிச்ச நடிகர் விஜய் எனக்குப் பக்கத்தில்.. ஒரு நல்ல நாள். கூடவே நிறைய அரட்டையும், சிரிப்பும்.. கொஞ்சம் லூடோவும்... மொத்தத்தில் நல்ல விமானப்பயணம்" என்று வரலட்சுமி பதிவிட்டுள்ளார். விஜய்யும் வரலட்சுமியும் சர்க்கார் படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக சென்னை விமான நிலையத்தில் விஞ்ஞானி நம்பி நாராயணனை தனது தந்தை சரத்குமார் உடன் சந்தித்துள்ளார். இந்தப் புகைப்படத்தையும் வரலட்சுமி வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
-