

சந்தானம் நடித்து வரும் 'சர்வர் சுந்தரம்' படப்பிடிப்பு துபாயில் நிறைவுற்றது. இறுதிகட்டப் பணிகள் துவங்கப்பட்டு இருக்கிறது.
'தில்லுக்கு துட்டு' படத்தைத் தொடர்ந்து ஆனந்த் பால்கி இயக்கும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கினார் சந்தானம். கெனன்யா பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்க முன்வந்தது.
வைபவி ஷந்திலியா, நாகேஷின் பேரன் நாகேஷ் பிஜேஷ் உள்ளிட்ட பலர் சந்தானத்துடன் நடித்து வந்தனர். பி.கே. வர்மா ஒளிப்பதிவு செய்துவந்த இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.
சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகள் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. அதனைத் தொடர்ந்து துபாயில் சில முக்கியமான காட்சிகள் மற்றும் க்ளைமாஸ் காட்சிகளை படமாக்க படக்குழு சென்றது.
துபாயில் நடைபெற்ற படப்பிடிப்பைத் தொடர்ந்து, 'சர்வர் சுந்தரம்' படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவுற்றது. அதனைத் தொடர்ந்து இறுதிகட்ட பணிகள் துவங்கப்பட்டன. இந்தாண்டு இறுதிக்குள் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.