ஜெயம் ரவியின் ‘சைரன்’ - வெளியானது மோஷன் போஸ்டர்

ஜெயம் ரவியின் ‘சைரன்’ - வெளியானது மோஷன் போஸ்டர்
Updated on
1 min read

ஜெயம் ரவி நடிக்கும் புதிய படமான 'சைரன்' படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் 'பொன்னியின் செல்வன் பாகம்-1' திரைப்படம் வரும் செப்டம்பர் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தைத் தொடர்ந்து இயக்குநர் எம்.ராஜேஷுடன் கைகோக்கிறார் ஜெயம்ரவி. 'ஜெஆர்30' என பெயரிடப்பட்டுள்ள இந்த ப்படத்தில் நாயகியாக பிரியங்கா மோகன் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அண்மையில் பூஜையுடன் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜுடன் இணைகிறார் ஜெயம்ரவி. 'சைரன்' என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வீடியோ வெளியாகியுள்ளது. கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.

இந்தப் படத்தில் நடிகர் ஜெயம்ரவி கைதி கதாபாத்திரத்திலும், கீர்த்தி சுரேஷ் காவல் அதிகாரியாகவும் நடிக்க உள்ளதாகவும், அனுபமா பரமேஸ்வர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in