

தீபாவளி பண்டிகையன்று ரசிகர் களைச் சந்தித்த ரஜினிகாந்த், அவர் களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
‘கபாலி’, ‘2.0’ ஆகிய படங்களின் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வந்த ரஜினிகாந்துக்கு கடந்த மே மாதம் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். கடந்த ஜூலை மாதம் சென்னை திரும்பிய அவர், ‘2.0’ படத்தின் சில காட்சிகளில் நடித்துவிட்டு சில நாட்களுக்கு முன் மீண்டும் அமெரிக்கா சென்றார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் ரஜினிகாந்த் அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பினார். சென்னை திரும்பியவுடன் தீபாவளி வாழ்த்து சொல்வதற்காக தனது வீட்டுக்கு வந்த ரசிகர்களைச் சந்தித்தார். அவர் களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.