பெப்சி தொழிலாளர்களுக்கு இளையராஜா விருந்து

பெப்சி தொழிலாளர்களுக்கு இளையராஜா விருந்து
Updated on
1 min read

இசையமைப்பாளர் இளையராஜா, 1,000 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனைப் படைத்தவர். இவருக்கு கடந்த ஜூலை மாதம் நியமன எம்.பி பதவி வழங்கப்பட்டது. சினிமா துறையை சேர்ந்த பலர், அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். பெப்சி தொழிலாளர்களும் வாழ்த்துகளைத் தெரிவிக்க விருப்பம் கொண்டனர். இதையடுத்து, பெப்சியில் உள்ள 23 அமைப்புகளைச் சேர்ந்த தொழிலாளர்களில், 450 பேரை, சென்னை வடபழனியில் உள்ள ஓட்டல் ஒன்றில் சந்தித்த இளையராஜா, வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்டார்.

இதில், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, இசை அமைப்பாளர்கள் சங்கத் தலைவர் தினா, எஸ்.ஏ.ராஜ்குமார், வீணை இசைக் கலைஞர் ராஜேஷ் வைத்யா, டிரம்ஸ் சிவமணி உட்பட பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இளையராஜா விருந்து வைத்தார். பின்னர் அனைவருடனும் குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in