வரலாற்றுத் தொடரில் கணேஷ் வெங்கட்ராம்

வரலாற்றுத் தொடரில் கணேஷ் வெங்கட்ராம்
Updated on
1 min read

இந்தியாவின் 75 ஆண்டு சுதந்திரத்தைக் கொண்டாடும் வகையில், கான்டிலோ பிக்சர்ஸ் மற்றும் டிடி நேஷனல் இணைந்து இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்ற 75 வரலாற்று நாயகர்களின் கதைகளை ‘ஸ்வராஜ்’ என்ற பெயரில் உருவாக்கியுள்ளது.

இந்த தொடர், ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு9 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம், மராத்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் பிரபலமான ஓடிடி தளத்திலும் பார்க்கலாம். இதில் திருவிதாங்கூர் ‘வேலுத்தம்பி’ கதையில் கணேஷ் வெங்கட்ராம் நடித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, ‘நமது வரலாறு மற்றும் கலாச்சாரத்தில் சொல்லப்படாத வீரம் செறிந்த பல கதைகள் உள்ளன. அதுபோன்ற ஒரு கதையில் நடிக்க ஆசைப்பட்டேன். ‘வேலுத்தம்பி’ கேரக்டர் மூலம் அந்த ஆசை நிறைவேறி இருக்கிறது. இதில் துணிச்சலான போர்வீரனாக நடித்த அனுபவம் உண்மையிலேயே நிறைவாக இருந்தது’’ என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in