அஜித்தின் எளிமை, நேர்மை, இரக்கம்: கருணாகரன் வியப்பு

அஜித்தின் எளிமை, நேர்மை, இரக்கம்: கருணாகரன் வியப்பு
Updated on
1 min read

அஜித் இவ்வளவு எளிமையுடன், நேர்மையுடன், இரக்கமுடன் இருப்பதைப் பார்க்கும் போது வியப்பாக இருப்பதாக கருணாகரன் குறிப்பிட்டுள்ளார்.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓப்ராய் ஆகியோருடன் இணைந்து கருணாகரனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

'தி இந்து'வுக்கு அளித்துள்ள பேட்டியில் 'நிஜ வாழ்க்கையில் ஆதர்ச மனிதர்கள் யார்?' என்ற கேள்விக்கு கருணாகரன் பதிலளிக்கும்போது "அஜித்துடன் பணிபுரிந்த போது, அவரை நெருக்கமாக உற்று நோக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் மற்றவர்கள் எல்லாம் 'உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்' என்று சொல்லிவிட்டு போய்விடுவார்கள். அஜித்தோ, நேராக மருத்துவரிடம் அப்பாயின்ட்மெண்ட் வாங்கப் போய்விடுவார். உங்கள் உடல்நலத்தையும் உறுதிப்படுத்துவார்.

பிடிக்கவே முடியாத அளவுக்கு பறந்து கொண்டிருக்கும் நடிகர்களில் அஜித்தும் ஒருவர். ஆனால், அதே நேரத்தில் எவ்வளவு எளிமையுடன், நேர்மையுடன், இரக்கமுடன் இருப்பதைப் பார்க்கும் போது வியப்பாக இருக்கிறது" என்று கருணாகரன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in