Published : 18 Aug 2022 05:49 PM
Last Updated : 18 Aug 2022 05:49 PM

ஆக.22-ல் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு தொடங்க வாய்ப்பு

கமல் நடிக்கும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட்22-ம் தேதி தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படம் 'இந்தியன் 2'. இந்தப் படத்தில் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதற்கான படப்பிடிப்பு கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கியது. ஆனால், அப்போது ஏற்பட்ட விபத்து காரணமாக படம் நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து கரோனா, படத்தின் பட்ஜெட் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட காரணங்களால் படப்பிடிப்பு தடைப்பட்டது. இதனால் இயக்குநர் ஷங்கர், ராம்சரணை வைத்து இயக்கும் 'RC15' படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே. கமல் நடிப்பில் வெளியான 'விக்ரம்' திரைப்படம் மெகாஹிட் அடித்த நிலையில், 'இந்தியன் 2' படத்தின் பிரச்சினைகள் சரிசெய்யப்பட்டு தற்போது மீண்டும் ஷூட்டிங்கிற்கு ஆயத்தமாகிறது படக்குழு.

அந்த வகையில், படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 22-ம் தேதி மீண்டும் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புக்காக சென்னையில் உள்ள ஃபிலிம் சிட்டியில் செட் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு மாதங்களுக்கு படப்பிடிப்பை படக்குழுவினர் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x