Published : 16 Aug 2022 03:04 PM
Last Updated : 16 Aug 2022 03:04 PM
திரையுலகில் 47 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நடிகர் ரஜினிகாந்திற்கு அவரது இரண்டு மகள்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினியின் திரைப்பயணம் 'அபூர்வ ராகங்கள்' படம் மூலம் தொடங்கியது. ஆரம்ப காலக்கட்டங்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்தவர், பின்னர் நாயகன் கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கத்தொடங்கினார்.
168 படங்களில் நடித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் தனது திரையுலக பயணத்தில் 47 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனை சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். மேலும், #47YearsOfRajinism என ஹேஷ்டேக் மூலம் மகிழ்ச்சி வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ரஜினிக்கு அவரின் மகள்கள் ஐஸ்வர்யாவும், சவுந்தர்யாவும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். சவுந்தர்யா தெரிவித்துள்ள வாழ்த்தில், ’’47 வருட மேஜிக். அப்பா, நீங்கள் தெய்வக் குழந்தை. உணர்வுபூர்வமானவர் நீங்கள்... வார்த்தைகளால் உங்களை விவரிக்க முடியாது. லவ் யூ தலைவா’’ என்று தெரிவித்துள்ளார்.
ரஜினியின் மூத்த மகள், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ’’47 ஆண்டுகள் ரஜினியிசம்... கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு கிடைத்தது இது. உங்கள் மகள் என்பதில் பெருமை கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
47 years of pure magic !!! you are gods child dearest appa !!!! You are an emotion that words cannot explain !!!
— soundarya rajnikanth (@soundaryaarajni) August 15, 2022
Love you Thalaivaaa #47YearsOfRajinism pic.twitter.com/b4bzmcYLzz
Sign up to receive our newsletter in your inbox every day!