ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் '1947 ஆகஸ்ட் 16' - கவனம் ஈர்க்கும் டீஸர்

ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் '1947 ஆகஸ்ட் 16' - கவனம் ஈர்க்கும் டீஸர்
Updated on
1 min read

ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் ‘1947 ஆகஸ்ட் 16’ திரைப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் Purple Bull Entertainment நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் திரைப்படம் 1947 ஆகஸ்ட் 16. இதன் பர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

கௌதம் கார்த்திக் நாயகனாக நடிக்க, ரேவதி என்பவர் இந்தப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகிறார். இந்திய சுதந்திர போராட்ட காலகட்டத்தில், ஒரு தொலைதூர கிராமத்தில் ஒருவன் பிரிட்டிஷ் படைகளுடன் போராடும் கதையை இப்படம் சொல்கிறது.

இதனிடையே, இந்தியாவின் 76வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டதை அடுத்து இப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. டிராமா ஜானரில் அந்தக் காலகட்ட கிராமங்களை கண்முன் நிறுத்தும் இந்த டீஸர் கவனம் ஈர்த்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in