சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் விஜய் ஆண்டனி - கவனம் ஈர்க்கும் ‘கொலை’ ட்ரெய்லர்

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் விஜய் ஆண்டனி - கவனம் ஈர்க்கும் ‘கொலை’ ட்ரெய்லர்
Updated on
1 min read

சென்னை: நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாய் உள்ள ‘கொலை’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. மேக்கிங் மற்றும் விஷுவல் காட்சிகள் கவனம் ஈர்க்கிறது இந்த 02.19 நிமிடங்கள் ஓடும் இந்த ட்ரெய்லர்.

நடிகர் விஜய் ஆண்டணி, ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, சித்தார்த்தா சங்கர், கிஷோர் குமார், ஜான் விஜய், அர்ஜுன் சிதம்பரம் மற்றும் சம்கித் போஹ்ரா போன்ற நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை பாலாஜி குமார் இயக்கியுள்ளார். இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் இந்தப் படத்தை இணைந்து தயாரித்துள்ளது. ஒளிப்பதிவு பணியை சிவகுமார் விஜயன் கவனித்துள்ளார். வெகு விரைவில் இந்த படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு இளம் பெண்ணின் கொலை தொடர்பான புலன் விசாரணைதான் கதையின் களம் என தெரிகிறது. விஜய் சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்தில் நடித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in