Published : 14 Aug 2022 03:35 PM
Last Updated : 14 Aug 2022 03:35 PM

முதல் நாளைவிட இரண்டாவது நாளில் கூடிய விருமன் வசூல்

கார்த்தி நடித்த விருமன் திரைப்படத்தின் வசூல் இரண்டாம் நாளில் அதிகரித்துள்ளது.

முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி சங்கர் நடித்துள்ள திரைப்படம் 'விருமன்'. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ், சூரி, கருணாஸ், ராஜ்கிரண், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 2டி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் தமிழகம் முழுவதும் 475 திரைகளில் வெளியானது.

கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம், முதல் நாளில் ரூ.8.20 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது. இரண்டாம் நாளான சனிக்கிழமை ரூ.8.45 கோடியை வசூலித்தது.

அதன்படி படம் வெளியான இரண்டு நாட்களில் மொத்தம் ரூ.16.65 கோடி ரூபாயை படம் வசூலித்துள்ளது. இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கலாம் என சினிமா வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

விருமன் விமர்சனத்தைப் படிக்க : விருமன் Review: மாடு குத்திக் கிழித்தாலும் பிழைத்துக் கொள்ளலாம். ஆனால்..?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x