கிரிக்கெட் வீரருடன் ‘தி லெஜண்ட்’ நடிகை மோதல்!

கிரிக்கெட் வீரருடன் ‘தி லெஜண்ட்’ நடிகை மோதல்!
Updated on
1 min read

பிரபல இந்தி நடிகை ஊர்வசி ரவுதெலா. தமிழில் ‘தி லெஜண்ட்’ படத்தின் நாயகியாக நடித்துள்ளார். இவரும் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்தும் காதலிப்பதாக சில ஆண்டுகளுக்கு முன்பு செய்திகள் வெளியாயின.

இந்நிலையில், நடிகை ஊர்வசி சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘‘வாரணாசியில் படப்பிடிப்பை முடித்துவிட்டு, ஒரு நிகழ்ச்சிக்காக டெல்லி சென்றேன். அங்குள்ள ஓட்டலுக்கு சென்றபோது, ஆர்பி (ரிஷப் பந்த்) என்னை சந்திக்க வந்திருந்தார். நான் தூங்கிவிட்டதால், பல மணி நேரம் காத்திருந்தார். எழுந்து பார்த்தபோது, அவர் எனக்கு 17 முறை ஃபோன் செய்திருந்தார். அவரிடம் பேசி, மும்பை சென்றபோது சந்தித்தோம்’’ என்று கூறியிருந்தார்.

அற்ப புகழுக்காக அவர் பொய் சொல்வதாக ரிஷப் பந்த், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, சில நிமிடங்களிலேயே நீக்கிவிட்டார்.

இதற்கு பதிலடி கொடுத்த ஊர்வசி, 'சின்ன பையா, கிரிக்கெட் விளையாடுங்கள். அவதூறு செய்ய நான் அப்பாவி பெண் அல்ல’ என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in