

மலையாளத்தில் வரவேற்பைப் பெற்ற '100 டிகிரி செல்சியஸ்' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் ஆகிறது.
தெலுங்கு மற்றும் மலையாளத்தில் வரவேற்பைப் பெற்ற படங்களை தமிழில் ரீமேக் பண்ணியவர் இயக்குநர் மித்ரன் ஜவஹர். சமீபத்தில் 'தட்டத்தின் மறயத்து' மலையாளப் படத்தினை தமிழில் 'மீண்டும் ஒரு காதல் கதை' என்ற பெயரில் ரீமேக் செய்திருந்தார்.
தற்போது மீண்டும் ஒரு மலையாள படத்தினை தமிழில் ரீமேக் செய்ய ஒப்பந்தமாகி இருக்கிறார் மித்ரன் ஜவஹர். சுவேதா மோகன், பாமா, மேக்னா ராஜ், அனன்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம் '100 டிகிரி செல்சியஸ்'.
தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக்காக இருக்கும் இப்படத்தில் லட்சுமி ராய் மற்றும் நிகிஷா படேல் ஆகியோர் ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். இதர நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் முதல் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.
வங்கி ஊழியர், இல்லத்தரசி, ஐடி துறையில் பணியாற்றுபவர், தொலைக்காட்சி நிருபர் மற்றும் கல்லூரிப் பெண் என ஐந்து பெண்களுக்கு இடையே நடக்கும் கதையாகும்.
இதுவரை 4 படங்களை இயக்கி இருக்கிறார் மித்ரன் ஜவஹர். அவை அனைத்துமே ரீமேக் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.