

தரணீதரன் - சிரிஷ் இணையும் புதிய படத்தின் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
'மெட்ரோ' படத்தைத் தொடர்ந்து பல்வேறு இயக்குநர்களிடம் கதை கேட்டு வந்தார் சிரிஷ். அதில் இயக்குநர் தரணீதரன் கூறிய கதை மிகவும் பிடித்துவிடவே அதில் ஒப்பந்தமானார்.
நவம்பர் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. நாயகி மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வந்தது.
தற்போது இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். நாயகியாக முன்னணி நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு.
விமர்சகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்த 'பர்மா' மற்றும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'ஜாக்சன் துரை' ஆகிய படங்களை தரணீதரன் இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.