ஹாலிவுட் நாடக விழாவில் பூஜா தேவாரியாவுக்கு விருது

ஹாலிவுட் நாடக விழாவில் பூஜா தேவாரியாவுக்கு விருது
Updated on
1 min read

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற நாடக விழாவில் விருது வென்றிருக்கிறார் நடிகை பூஜா தேவாரியா

'மயக்கம் என்ன' படத்தில் தொடங்கி 'இறைவி', 'குற்றமே தண்டனை', 'ஆண்டவன் கட்டளை' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் பூஜா தேவாரியா. சினிமாவில் நடிப்பதற்கு முன்பாகவே பல்வேறு இடங்களில் நாடகங்கள் நடத்தி வந்தார். மேலும், சொந்தமாகவே நாடக தயாரிப்பு நிறுவனமும் வைத்திருக்கிறார்.

தற்போது பூஜா தேவாரியாவுக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தின் ஹாலிவுட் நாடக விழாவான 'ஷார்ட் & ஸ்வீட்' நாடக விழாவில் 'வளர்ந்து வரும் கலைஞர்'' என்ற விருது வழங்கப்பட்டு இருக்கிறது. இவ்விழாவில் பூஜா தேவாரியாவுடன் இணைந்து மதிவாணன் ராஜேந்திரனும் இந்த விருதை வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. 'ஸ்ட்ரே பேக்டரி' என்னும் நிறுவனத்தின் சார்பில் இவ்விருவர் மட்டும் தான் இந்தியாவில் இருந்து தேர்ந்தெடுக்கபட்டிருக்கிறார்கள்.

மெக்ஸிகோ, அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் இருந்து கலந்து கொண்ட கலைஞர்கள் மத்தியிலும், 'எமி விருது' பெற்ற நடிகர்கள் மற்றும் எழுத்தாளர்கள் மத்தியிலும் இந்த விருதை இவர்கள் இருவரும் வென்றிருக்கிறார்கள்.

இவ்விழாவில் 'மை நேம் ஸ் சினிமா' மற்றும் 'வா வன் கோ' ஆகிய இரண்டு நாடகங்களை இந்த விழாவில் பூஜா தேவாரியாவும், மதிவாணன் ராஜேந்திரனும் அரங்கேற்றி இருக்கின்றனர் . சிட்னி மற்றும் ஆக்லண்ட் நகரங்களில் அரகேற்றப்பட்ட 'மை நேம் ஸ் சினிமா' நாடகத்திற்காக, சிறந்த நடிகை மற்றும் சிறந்த இயக்குநருக்கான விருதுகளை இவர்கள் இருவரும் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in